மேலும் அறிய
மதுரை அரசு மருத்துவமனைய ரூ.50 லட்சம் மதிப்பிலான அதிநவீன DXA ஸ்கேன்: எலும்பு அடர்த்தி குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியலாம்!
சென்னைக்கு அடுத்த படியாக, தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையில் HOLOGIC-DXA Scan கருவி அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள்
Source : whatsapp
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ50லட்சம் மதிப்புள்ள அதிநவீன டெக்ஸா (DXA) ஸ்கேன் கருவி அரசு இராஜாஜி மருத்துவமனை, அகச்சுரப்பியல்துறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதுகெலும்பு அடர்வு குறை நோய்
Osteoporosis / முதுகெலும்பு அடர்வு குறை நோய் என்பது எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் (Bone strength) வயது முதியோர்களுக்கு இயல்பாக ஏற்படும் ஒரு பிரச்னை ஆகும். 60 வயதிற்கு மேல் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் 70 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் அனைவருக்கும் இயல்பாக Osteoporosis உருவாகலாம். மாதக்கணக்கில் steroid மருந்து எடுத்துக் கொள்பவர்கள், முடக்கு வாத நோய் உள்ளவர்கள் (Rheumatoid arthritis) அனைவருக்கும் Osteoporosis ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். Osteoporosis கண்டறியப்படாத நிலையில் முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவு Spinal, Hip Fracture ஏற்படலாம். எலும்பு முறிவு வரக்கூடிய நிலையை முன்கூட்டியே கணிப்பதற்கு CT மற்றும் MRI Spine மூலம் எடுப்பதற்கு அதிக பொருட்செலவும், நேர விரயமும், கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். WHO மற்றும் உலகளவில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி DXA Scan (Dual-energy X ray Absorptiometry) என்னும் கருவியில் மூலம் Xray எடுப்பதை விட குறைவாக கதிர்வீச்சின் மூலமாக Osteoporosis-ஐ மிகத் துல்லியமாக கண்டறியலாம்.
எலும்பு முறிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்
DXA ஸ்கேன் மூலம் முதுகெலும்பின் உறுதித்தன்மை (Spinal Bone Mineral Density) மற்றும் வலது, இடது இடுப்பெலும்பின் (Hip BMD) உறுதித்தன்மையைக் 3நிமிடங்களுக்கும் குறைவாக கண்டறியலாம். Osteoporosis இருக்கும் பட்சத்தில் அகச்சுரப்பியல் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று நவீன ஊசி மருந்துகள், கால்சியம் மற்றும் விட்டமின் D எடுத்துக்கொள்ளும் போது, எலும்பு முறிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். மிக அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு DXA Scan மூலமாக உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் (Body fat%) மதிப்பிடலாம்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
தமிழக அரசு மருத்துவக்கல்லுாரிகளில் சென்னைக்கு அடுத்த படியாக, தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையில் HOLOGIC-DXA Scan கருவி அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் Rs.2,500- செய்யப்படும் DXA SCAN பரிசோதனை, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் நிகழ்ச்சியின் போது தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவே ல் தியாகராஜன், வணிவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.சுகந்தி ராஜகுமாரி, மதுரை மருத்துவக் கல்லுாரி முதல்வர் மரு.லெ.அருள் சுந்தரேஷ்குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் அ.குமரவேல், துணைக் கண்காணிப்பாளர் மரு.செல்வராணி, அகச்சுரப்பியல் துறைத் தலைவர் மரு.ஸ்ரீதர், பொது மருத்துவ துறைத்தலைவர் மரு.செந்தில் மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் மரு.முரளிதரன் உடன் இருந்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்
Advertisement
Advertisement





















