இனி எஸ்கேப் ஆக முடியாது! நிழல் போலத் தொடரும் மூன்றாம் கண்... 24 மணி நேரமும் Live கண்காணிப்பு
குற்றவாளிகளுக்குச் செக்! விழுப்புரத்தில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு மையம் தயார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் இ.எஸ். உமா. முன்னிலையில் திறந்து வைத்தார்.
சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் இ.எஸ். உமா. முன்னிலையில் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது.,
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் நகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், மூன்றாம் கண் எனப்படும் CCTV கண்காணிப்பு கேமராக்கள், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரிலிருந்து மேற்கு காவல் நிலைய நான்கு முனை சந்திப்பு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பானாம்பட்டு சந்திப்பு வழியாக கோலியனூர் கும்பகோணம் சாலை நான்கு முனை சந்திப்பு வரை (10 KM),
விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், தந்தை பெரியார் நகர் வழியாக ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை (8 KM) என மொத்தம் 18 கி.மீ தொலைவில் 14 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட CCTV கேமராக்கள் உட்பட 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் நகரத்தில் நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க மேற்கண்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள CCTV கண்காணிப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட காவல் துறையினரால் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மரகன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.





















