மேலும் அறிய
Advertisement
விஷ சாராய வழக்கு: இன்று ஆஜர்படுத்தப்பட்ட 6 பேருக்கு நீதிமன்ற காவல்
விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 11 பேரில் ஐந்து பேரிடம் விசாரணை முடிந்து ஒருநாளுக்கு முன்பாகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இன்று 6 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கில் முக்கியமானவர்கள் அமரன், பர்க்கத்துல்லா, மன்னாங்கட்டி ஆறுமுகம், குனசீலன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் மதன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில் இவ்வழக்கில் 12 பேர் மீது போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை செய்ய நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதுத்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் 26ம் தேதி 5 மணி வரை விசாரணை செய்யலாம் என மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் 11 பேரில் முத்து, ரவி, ஆறுமுகம், குணசீலன், மண்ணாங்கட்டி ஆகிய 5 பேரிடம் விசாரணை முடித்த சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு நாளுக்கு முன்பாகவே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஐந்து பேரையும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இன்று ஏழுமலை, இளையநம்பி, அமரன், பர்த்கதுல்லா, பிரபு, ராபட் ஆகியோர் இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அகிலா முன்பாக ஆஜர் படுத்தியுள்ளனர். அமரன் மட்டும் அடுத்தம் மாதம் 9ஆம் தேதி வரையிலும், மற்றவர்களுக்கு 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என நீதிபதி அகிலா உத்தரவிட்டார். இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion