மேலும் அறிய

Bharathi Mani Passed Away | பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி காலமானார்..

Bharathi Mani Passed Away | பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி காலமானார்..

பிரபல நடிகரும், எழுத்தாளருமான பாரதி மணி புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று காலமானார். பாபா, பாரதி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நன்கு அறிமுகமானவர் பாரதி மணி. அதற்கு முன்பாகவே அவர் டெல்லியில் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இது மட்டுமில்லாமல் இவர் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் எனும் புத்தகம் இலக்கிய வாசகர்கள் இடையே பேசப்படும் இலக்கியமாக இருந்து வருகிறது.

பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும், தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் தனது இரங்கல் குறிப்பில், "

'பாட்டையா' எனப் பாசமுடன் அழைக்கப் படும் பாரதிமணி அய்யா மறைந்து விட்டார்.  :( எத்தனை அற்புதமான மனிதர்! என்னைப் போல எத்தனையோ மனங்களில் தனித்ததொரு இடம் பிடித்து இரட்டணக்காலிட்டு அமர்ந்தவர்.

நாடெங்கும் சுற்றி வந்தாலும் நான் குமரியின் பார்வதிபுரத்து விதைதான் என்று தன் ஊரையும் தோளில் தூக்கிச் சுமந்தவர்.  மகனாய், தம்பியாய், கணவனாய், மருமகனாய், தகப்பனாய், தாத்தாவாய், நாடக நடிகனாய்,  திரைப்படங்களிலும் பல வேடங்கள் தரித்தவர்.  ஓர் எழுத்தாளராகவும் தன் அனுபவங்களை, "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" என்று தீட்டியவர். எளிமைதான் இவரது பலம். எளிய மனிதர்களுடனான இவரது பிணைப்பும், மிகப் பெரிய அந்தஸ்த்துக்காரர்களைத் தாமரை இலைத் தண்ணீரெனக் கடத்தலுமே இவரது அறம். வாழ்வையே கலையாகச் சுவைத்தலே இவரது ஆன்ம ரஸம். 

தாம் வாழ்ந்த அனுபவத்தின் நிறைகடலைத் தளும்பாமல் உள்ளன்போடு உள்ளங்கையில் தருபவர். செழுமையடைந்த ஒரு மனித மனத்தின் கனிவையும் நிறைவையும் கலையின்வழி வாழ்வைத் துய்த்த பூரணத்தையும் ஒருசேர ஒரு மனிதரிடத்திலே நான் கண்டு வியக்கிறேனென்றால் - அது இவரிடத்தேதான் - 'A Wholesome Man!'.அவரோடு அதிகம் பழகச் சந்தர்பங்களில்லை எனக்கு - ஆனால், ஆர்வமும், அன்பும், அக்கறையும் துலங்க என்னை அணைக்கின்ற அந்த ஒரு அணைப்பில் உண்மையான வாஞ்சையும் ஆதுரமும் புலப்படும். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் திரி தூண்டிவிடும் அற்புத நிமிடங்கள்.

Bharathi Mani Passed Away | பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி காலமானார்..

Bharathi Mani Passed Away | பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி காலமானார்..

வெடித்துச் சிரிக்கும் அவர் பேச்சும் குரலும் இன்றில்லை -அநேக சந்தர்ப்பங்களில் அவர் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் "I am a blessed soul!" என்ற சொற்றொடரை மனதில் கொள்கிறேன். அவரை நான் எப்போதும் 'Lovable Rascal ' என உரிமையுடன் அழைப்பதை மிக ரசித்துச் சிரிப்பார்.

வயது, பால் பேதமற்ற, எண்ணி முடியாத அவரது நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், அய்யாவின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். You will be dearly missed my "lovable Rascal". 

இவ்வாறு, தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Embed widget