(Source: ECI/ABP News/ABP Majha)
அமைச்சர் முன்பு திருமாவளவன் கைகட்டினாரா? நடந்ததை விவரித்த விசிக மண்டல அமைப்புச் செயலாளர்
அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனான திருமாவளவன் சந்திப்பு குறித்து விசிக மண்டல அமைப்புச் செயலாளர் இரா. கிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்கும்போது திருமாவளவன் கைகட்டி அமர்ந்தது போலவான புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து பதிவிட்ட நிலையில் அது குறித்து விசிக மண்டல அமைப்புச் செயலாளர் இரா. கிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்,
அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்கும்போது திருமாவளவன் அவர் முன்னாள் கைக்கட்டி அமரவில்லை. திருமாவளவன் கைகளை வழக்கம்போல் கோர்த்துதான் அமர்ந்து ராஜகண்ணப்பனிடையே பேசினார். திருமாவளன் கைக்கட்டி அமர்ந்திருப்பதாக வெளியான புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை. நான் தான் அந்த புகைப்படங்களை எனது செல்போனில் எடுத்தேன்
ராஜகண்ணப்பன் அவர் அருகே இருந்த சோஃபாவில் தான் திருமாவளவனை அமரச்சொன்னார், இடையில் ஒரு சிலை இருந்ததால், முகம் பார்த்து பேச முடியாது என்பதற்காக, திருமாவே அருகில் இருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அதில் அமர்ந்தார். ராஜக்கண்ணப்பன் சாதி பார்க்கவில்லை; அப்படி பார்த்திருந்தால் அவர் திருமாவை வாசல் வரை வந்து வரவேற்று இருக்க மாட்டார், கிளம்பும்போது வந்து வழியனுப்பி வைத்திருக்கவும் மாட்டார். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவிருப்பதால், ராஜக்கண்ணப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, திருமா கிளம்பிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்