மேலும் அறிய

Vanniyar Reservation: "வாடிய மக்கள் இனி..." வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணைக்கு முதல்வருக்கு நன்றி - ராமதாஸ் அறிக்கை..!

வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ், சி.வி.சண்முகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

Vanniyar Reservation:

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை நேற்று காலை வெளியிடப்பட்டது. அதில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான 20% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு இல்லாமல் தான் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 8/2021 கடந்த பிப்ரவரி 26&ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது; வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

Vanniyar Reservation:

எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை 200 புள்ளி ரோஸ்டர் பட்டியலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடச் செய்துள்ளார். மாணவர் சேர்க்கை அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த பிழையை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

Vanniyar Reservation:

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அது நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாலும், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தான் செய்யப்படும்  என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், இனி அறிவிக்கப்படவுள்ள மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் 10.50% இடங்கள் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு  ஒதுக்கப்படும். 6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கல்வியில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இது பெருமளவில் பயனளிக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் சமூக நிலையில் இனி அச்சமூகம் படிப்படியாக முன்னேறும்.

வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஓராண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள துறைகளில் பின்பற்றுவதற்காக 200 புள்ளி ரோஸ்டரில் 21 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இது தான் எனது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதை எட்டுவதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் சமூகநீதிப் போராட்டங்களை ஓயாமல் நடத்தி வருகிறேன். அதற்கு இப்போது பயன் கிடைத்துள்ளது.

வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு சும்மா கிடைத்துவிடவில்லை. 41 ஆண்டுகளுக்கு முன் 1980&ஆம் ஆண்டு ஜூலை 20&ஆம் நாள் திண்டிவனத்தில் உள்ள எனது இல்லத்தில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை  எனது வாழ்க்கையின் பெரும்பகுதி இதற்கான சமூகநீதிப் போராட்டங்களில் தான் கழிந்திருக்கிறது. இந்தப் போராட்டங்களில் எனது அழைப்பை ஏற்று லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த பாட்டாளி மக்களும் இட ஒதுக்கீட்டுப் போராட்டக் காலங்களில் அனுபவித்த கொடுமைகளும், துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், பிற அடக்குமுறைகளுக்கும் ஆளாகி உயிர்நீத்த தியாகிகள் 21 பேர் என்றாலும், உயிரைச் சுமந்து கொண்டே மரண வேதனைகளை அனுபவித்த ஆண்களும், பெண்களும் ஏராளம். எதையும் எதிர்பார்க்காமல் என் மீது நம்பிக்கை வைத்து வன்னியர் சங்கம் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் சிந்திய ரத்தமும், வியர்வையும்  தான் இப்போது இட ஒதுக்கீட்டு முத்துகளாக விளைந்துள்ளன. அதற்காக இந்தத் தருணத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட தீரர்கள், சிறை  வாசம் அனுபவித்த சிங்கங்கள் அனைவருக்கும்  நாம் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்வோம்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான முந்தைய ஆட்சியில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இரு ஆண்டுகளாக குரல் கொடுத்தோம். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  பல முறை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தோம். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இறுதி முயற்சியாக கடந்த ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு ஜனவரி 28&ஆம் தேதி வரை மொத்தம் 6 கட்டங்களாக 9 நாட்களுக்கு நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாகவே  வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% உள் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.

சமூகநீதிக்கான போராட்டம் என்பதும், இயக்கம் நடத்துவதும் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்றது ஆகும். அது ஒரு போதும் ஓய்வதில்லை. தமிழ்நாட்டில் 1989&ஆம் ஆண்டிற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் உள் ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வன்னியர் 10.50% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுத்ததில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெரும் பங்கு உண்டு. தேசிய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு,  மருத்துவக் கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.50% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்ததும் இந்த இராமதாசு தான். இந்த வழியில் எனது சமூகநீதிப் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த தருணத்தில் நான் அளிக்க விரும்பும் வாக்குறுதி இது தான்....

‘‘ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான  இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவது தான் எனது இலக்கு. அது தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை முழுமையடையச் செய்யும். அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள் தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால் தான் தமிழ்நாடு புதிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும். எனவே, அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க நானும், பா.மக.வும் ஓயாமல் பாடுபடுவோம்’’.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget