மேலும் அறிய

சீர்காழியில் கிடைத்த பஞ்சலோக சிலைகள், செப்பேடுகளை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

தமிழக ஆன்மிக மரபின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களுக்கும், ஆன்மிக தலைவர்களுக்கும், இந்த தொல்லியல் சான்றுகளை திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சீர்காழி அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் சீரமைப்புப் பணியின்போது, பூமிக்கடியில் இருந்து பஞ்சலோக சுவாமி சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்துள்ளன. இந்த செப்பேடுகளில் நம் தாய்த்தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான, தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகப் பழமையான தருமை ஆதீனத்தின் குருமகா சன்னிதானம், தமிழறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் பலரும், "தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்று, பெரும் ஆவணமாகக் கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். சைவத்தின் மிக பிரம்மாண்ட எழுச்சிக்கு அடித்தளமிட்ட அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவர், தீந்தமிழில் பாடிய பதிகங்கள் தான், திருமுறைகள் என்றும் தேவாரம் என்றும் அழைக்கப்பட்டன. இதன் காலம் கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு.

தேவாரப் பதிகங்கள் இதுவரை ஓலைச்சுவடிகளில் தான் கிடைத்துள்ளன. சில இடங்களில் கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், முதல்முறையாக செப்பேடுகளில் தேவாரப் பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளது தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோல கடந்த வாரம், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களுக்கான உரை அடங்கிய ஓலைச்சுவடிகள், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் உள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் கிடைத்துள்ள சுவாமி சிலைகள், செப்பேடுகள் மற்றும் ஆழ்வார்திருநகரியில் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை தீவிரமாக ஆய்வு செய்து அதில் எழுதப்பட்டிருப்பவற்றையும், அதன் காலத்தையும் துல்லியமாக கண்டறிய வேண்டும். அதன் மூலம் தமிழக வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் உள்ள பல நூறு ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில்கள் தான் தமிழகத்தின் அடையாளம். தமிழகம் ஆன்மிக மண் என்பதற்கான சான்று. தற்போதுள்ள திமுக அரசுக்கு, ஹிந்து மதத்தின் மீதும் கோயில்கள் மீதும், அதன் கலாசார பெருமிதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் தமிழக ஆன்மிக மரபுக்கு எதிராக பேசி வருகின்றனர். அதுதான் தங்களது கொள்கை என்றும் பறை சாற்றி வருகின்றனர். 

திராவிடம் என்ற நிலப்பரப்பை, 'இனம்' என்றும் தமிழர்களுக்கு மதம் இல்லை என்றும் நாத்திகவாதம் பேசி வருகின்றார். எனவே தமிழக ஆன்மிக மரபின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களுக்கும், ஆன்மிக தலைவர்களுக்கும், இந்த தொல்லியல் சான்றுகளை திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலையிட்டு தொல்லியல் துறையில் நீண்ட அனுபவமும், தமிழக ஆன்மிக மரபை நன்கறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதனை, மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget