Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
இறைவன் - இறைவியின் அருளால் இரு வீட்டார் ஆசியோடு காதலன் அல்லது காதலியை கரம் பிடித்த பின் தம்பதிகளாக இந்த தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்ற பழக்கம் உள்ளது.

காதல்
காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன் ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.
காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்!
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும், நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.
தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
இரு வீட்டார் ஆசியோடு காதலன் அல்லது காதலியை கரம் பிடிக்க இந்த கோவிலுக்கு போங்க !
காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. காதல் திருமணம் அதுவும் பெற்றோர் சம்மத்தத்துடன் நடக்க வேண்டும் என்பதே காதலிப்பவர்களின் பெரும் கனவாக இருக்கும்.அப்படி காதலர்கள் வணங்க வேண்டிய கோவில் நாகபட்டினம் மாவட்டம் குத்தலாத்தில் அமைந்துள்ளது.
கோவில் தல வரலாறு :
பார்வதி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவனை நோக்கி பரதமாமுனிவர் கடும் தவம் இருந்தார்.அவரின் தவத்தை ஏற்ற சிவ பெருமான் பார்வதி தேவியை பரதமாமுனிவரின் யாக குண்டத்தில் குழந்தையாக பிறக்கச் செய்தார். பரிபூரண சிவபக்தையாக விளங்கிய பார்வதி சிவனையே கணவனாக எண்ணி அவர் மீது காதல் கொண்டாள்,மணலில் சிவலிங்கத்தை அமைத்து மனம் உருக வணங்கி வந்தார். பார்வதியின் உண்மையான அன்பை உணர்ந்து நேரில் தோன்றிய சிவன் தேவியின் கரங்களை பற்றி உடன் வருமாறு அழைக்க தேவியோ இல்லை சுவாமி நான் உங்களை நேசிப்பதும்-விரும்புவதும் உண்மையே ஆனால் என் தந்தையின் சம்மதத்தை முதலில் பெறுங்கள் அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியவுடன் சிவன் அங்கிருந்து மறைந்தார்.
தேவி சிவ பெருமானின் நினைவிலேயே இருந்து தன்னை வருத்தி கொண்டு வந்த நிலையில் சிவ பெருமான் சில காலம் கழித்து நந்தீஸ்வரை தேவியின் தந்தை பரதமா முனிவரிடம் மணம் பேச அனுப்பி வைக்கிறார். நந்தீஸ்வரரும் இறைவன் இட்ட ஆனையை நிறைவேற்றும் விதமாக பரதமா முனியிடம் மணம் பேசுகிறார்.
திருமணத்திற்கு மகிழ்வுடன் பரதமா முனி சம்மதம் தெரிவிக்கவே இறைவனுக்கும் - இறைவிக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு குத்தாலத்தில் சிறப்பாக திருமணம் நடந்தது.இதன் காரணமாக தான் சிவனுக்கு அங்கு கோவில் அமைக்கப்பட்டது.பெண் ஊர் என்பதால் இறைவன் பாதுகையோடு திருமணத்திற்கு வந்தார். அவருக்கு நிழல் அளிக்க கயிலாயத்தில் இருந்த உத்தாலம் மரமும் உடன் வந்தாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக உத்தால மரமே விளங்குகிறது. மேலும் உத்தாலம் என்பது குத்தாலம் என மருவி உள்ளது.
இந்த தலத்தில் வழிப்பட்டால் திருமணம் கைக்கூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
இந்த திருத்தலத்தில் இறைவன் உத்தவேதீஸ்வர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் அரும்பன்ன வனமூலை நாயகி என்ற பெயரில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அமிர்தமுகிழாம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். திருமணத்தலமாக விளங்கும் இந்த தலத்தில் வழிப்பட்டால் திருமணம் கைக்கூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.மேலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்ய விரும்புவர்கள் தங்கள் இருப்பிடத்திலே இருந்து கொண்டு மனம் உருகி வழிபடுகின்றனர். இறைவன் - இறைவியின் அருளால் இரு வீட்டார் ஆசியோடு காதலன் அல்லது காதலியை கரம் பிடித்த பின் தம்பதிகளாக இந்த தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்ற பழக்கம் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

