மேலும் அறிய

Theni Rose Grapes: நல்லா வெளஞ்சும் விக்க முடியல... கண்ணீரில் பன்னீர் திராட்சை விவசாயிகள்!

கோடைகால சீசனில் திராட்சை விலை கிலோவிற்கு 130 ரூபாய் வரை நல்ல விலைக்கு விற்கப்படும்.  ஆனால் தற்போது கொள்முதல் செய்வதற்கு ஆளில்லாமல்   வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் ஒரு விவசாய பகுதியாக விளங்குகிறது. கம்பம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டுமல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை தற்போது விவசாயம் செய்யப்பட்டு விளைச்சலும் நல்ல நிலையில் உள்ளது.

Theni Rose Grapes: நல்லா வெளஞ்சும் விக்க முடியல... கண்ணீரில் பன்னீர் திராட்சை விவசாயிகள்!

ஆனால் வியாபாரம் இன்மையால் விலை இன்மையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பகுதியில் விளையும்  கருப்பு பன்னீர் திராட்சை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் அதிக அளவில் கேரளாவிற்கு திராட்சை  ஏற்றுமதியும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோன வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் இரண்டாம் கட்ட அலை எதிரொலியால் பல்வேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. 

அதில் தற்போது பன்னீர் திராட்சையும் இணைந்துள்ளது.  தற்போது கோடை கால சீசனில்  அதிகம் விற்பனை ஆகும் திராட்சை வியாபாரம் , போதிய விற்பனை ஆகாமல் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக இப்பகுதி திராட்சை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து இன்மை, வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை மேலும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லை என்ற பல்வேறு சிக்கல்களில் திராட்சை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  கோடைகால சீசனில் திராட்சை விலை கிலோவிற்கு 130 ரூபாய் வரை நல்ல விலைக்கு விற்கப்படும்.  ஆனால் தற்போது கொள்முதல் செய்வதற்கு ஆளில்லாமல்   வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Theni Rose Grapes: நல்லா வெளஞ்சும் விக்க முடியல... கண்ணீரில் பன்னீர் திராட்சை விவசாயிகள்!

வேளாண் பொருட்களுக்கு போக்குவரத்திற்கு பாதிப்பில்லை என்றாலும் கொண்டு சென்று வாங்க மக்கள் வராத போது அதை விற்பதால் எந்த பயனும் இல்லை. எனவே வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். மற்ற பொருட்களைப் போல் தேக்கத்திலும் வைக்க முடியாது. ஓரிரு நாளில் விற்றால் தான் லாபம் . இல்லையென்றால் அழுகி வீணாகும். தற்போது அந்த சூழலில் தான் பன்னீர் திராட்சை விவசாயிகள் உள்ளனர். கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல விளைச்சல் இருந்தும் விற்க முடியவில்லையே என்கிற ஏக்கம் ஒருபுறம், கொடியிலேயே அழுகி வீணாகும் திராட்சையை பார்த்து கவலை மறுபுறம் என மேற்கு தொடர்ச்சி மலையில் திராட்சை சாறு, விவசாயிகளின் கண்களில் வருகிறது. மாற்று ஏற்பாடு செய்யுமா அரசு, எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget