மேலும் அறிய

பிரதமர் வருகையின்போது போராட்டம்: திமுக அரசின் இரட்டை வேடம்? நயினார் நாகேந்திரன் கண்டனம்

பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்த தினத்தில் கூட்டணி கட்சிக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுத்த திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பிரதமர் தமிழகம் வந்த தினத்தன்று போராட்டத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு. நேற்றைய தினம் நமது பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்? நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா?

குறிப்பாக, நமது பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது. ஒருவேளை, தனது கூட்டணிக் கட்சியினர் பங்கெடுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கூட திமுக அரசு இழந்துவிட்டது போலும். காரணம் எதுவாயினும், பிரதமர் தமிழகம் வந்த தினத்தில் திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Embed widget