மேலும் அறிய

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கருணாநிதி நினைவு நாணயம்: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டுள்ளார்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திறங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " நா நயம் மிக்க கலைஞருக்கு நாணயம் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கலைஞர் உருவம் பொறித்த  நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம். இப்போது இந்தியாவே கொண்டாடுகிறது என்பதற்கு இதுவே அடையாளம். 

பாதுகாப்பு துறை அமைச்சர் நாணயத்தை வெளியிட்டது மிக மிக பொருத்தமானது தான். கடந்த ஓராண்டாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம், மகளிர் உரிமைத்தொகை, மதுரை கலைஞர் நூலகம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை, திட்டங்களை பட்டியலிட்டு சொன்னால் ஒருநாள் போதாது.

கலைஞரின் நாணயத்தை வெளியிட ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்த நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராஜ்நாத் சிங் அவர்களை தான் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டுமென என் மனதில் நினைத்திருந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 15 இல் அனைத்து முதலமைச்சர்கள் நாட்டில் கொடி ஏற்றினார்கள். அதற்கான அத்தனை உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. செயல்படுவதும், செயல்பட வைப்பதும் அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கருணாநிதி. இது எனது அரசு அல்ல நமது அரசு, ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget