மேலும் அறிய

TN Ministers LIVE: தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை?

Udhayanidhi Stalin Swearing In as TN Minister LIVE Updates: இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

LIVE

Key Events
TN Ministers LIVE: தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை?

Background

Udhayanidhi Stalin Swearing In as TN Minister LIVE Updates: திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, கட்சிப்பணி மற்றும் திரைத்துறையில் ஒரே நேரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என கருதப்பட்டது.

அமைச்சராகிறார் உதயநிதி:

இந்நிலையில் தான் உதயநிதியை அமைச்சராக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அதையேற்று, இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே,  உதயநிதிக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா அப்பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம்:

தற்போதைய சூழலில் அமைச்சர் மெய்யநாதன் சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொறுப்புகளை வகித்து வருகிறார். அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் முறையாக செயல்படாதவர்கள் மற்றும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.பெரியசாமி மற்றும் உதயநிதிக்காக திமுக இளைஞரணி செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

தாத்தா, அப்பாவை மிஞ்சிய உதயநிதி:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ. ஆன 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார். அதைதொடர்ந்து, தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன 17 அண்டுகள் கழித்து தான் அமைச்சரானார். ஆனால், சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் என்பது குறிப்பிடத்தகது.

உதயநிதியின் பரப்புரையும், அமைச்சர் பொறுப்பும்:

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு அவர் செய்த பரப்புரை மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அவரது பரப்புரை தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து, உதயநிதி தலைமையில் நடத்தப்பட்ட இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டமும் அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, உதயநிதி தன்னுடைய தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை கொண்டு வந்ததாக உதயநிதி தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருவது நினைவுகூறத்தக்கது. 

11:41 AM (IST)  •  14 Dec 2022

வாழ்த்துகள் தம்பி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

வாழ்த்துகள் தம்பி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

11:37 AM (IST)  •  14 Dec 2022

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு!

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் துறையும் புதிதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

11:35 AM (IST)  •  14 Dec 2022

அமைச்சர் மெய்யநாதனுக்கு கூடுதலாக முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை..!

அமைச்சர் மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் துறையுடன் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

11:34 AM (IST)  •  14 Dec 2022

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு..!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்குக் கூடுதலாக சீர் மரபினர், காதி, கிராம தொழில் வாரியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

11:33 AM (IST)  •  14 Dec 2022

சேகர் பாபுவுக்கு கூடுதல் துறை..!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget