உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். முதன்மைச் செயலராக நியமனம்! மற்ற செயலர்கள் யார்?
உமாநாத் ஐ.ஏ.எஸ்., எம்.எஸ். சண்முகம் ஐ.ஏ.எஸ்., மற்றும் அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று தமிழ்நாட்டின் புதிய அரசாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற அறிவிக்கையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின்படி தொல்லியல் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த உமாநாத் ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் இரண்டாவது செயலராகவும், தமிழ்நாடு அருங்காட்சியக ஆணையராக இருந்த எம்.எஸ்.சண்முகம் முதலமைச்சரின் மூன்றாவது செயலராகவும், தொழிற்துறை ஆணையர் மற்றும் தொழில் வாணிபத் துறையின் இயக்குநராக இருந்த அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் நான்காவது செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read:முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்! முதல்வர் பொறுப்பேற்றார் ஸ்டாலின்!