சிறுநீரகங்கள் செயலிழப்பு.. இந்த தப்பை பண்ணாதீங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நமது அன்றாட வாழ்வில் சில தவறுகள் மெதுவாக சிறுநீரகங்களுக்கு நிரந்தர சேதம் விளைவிக்கும்.

போதுமான தண்ணீர் குடிக்காததால் உடலில் நச்சுக்கள் சேரும். கற்கள் உருவாகும் ஆபத்து அதிகரிக்கும்.

உப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரக நாளங்களை சேதப்படுத்தும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.

அதிக நேரம் சிறுநீரை அடக்குவதால் பாக்டீரியா வளரும். சிறுநீர் பாதையில் தொற்று (UTI) ஏற்படும்.

சிறுநீரக தொற்றுகள் அடிக்கடி ஏற்பட்டால் அவை நேரடியாக சிறுநீரகங்களுக்குச் சென்று கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

துரித உணவுகள், இனிப்புப் பண்டங்கள், அதிக பதப்படுத்தப்பட்ட, வறுத்த உணவுகளை உட்கொள்வதால் நீரிழிவு நோய், உடல் பருமன் ஏற்படும்.

உயர் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமன் ஆகியவை நீண்ட காலத்திற்கு 'நாள்பட்ட சிறுநீரக நோய்' (CKD) க்கு வழிவகுக்கும்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடியுங்கள். ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.