அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை : துக்ளக் விழாவில் ஓபனாக பேசிய குருமூர்த்தி
இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை என துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார்.
துக்ளக் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துக்ளக் 52 ம் ஆண்டு விழா இன்று சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இந்த ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்தநிலையில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி, ’’இந்தி திணிப்பை எதிர்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை. பாஜக இந்த தவறை செய்யக் கூடாது’’ என துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசினார்.
மேலும், எந்த கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குகிறதோ, அது தேனில் விழுந்த ஈ தான். அது வெளியிலும் வரமுடியாது, வந்தாலும் பறக்காது. உள்ளேயே அழிந்துவிடும். திமுகவிற்கு அதுதான் நடக்கப்போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்