திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாத காரணத்தால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி திணறி வந்த நிலையில், தொடர் முயற்சிகளை தொடர்ந்து திருச்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாத காரணத்தால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி திணறி வந்தார்.
பயணிகளின் கதி என்ன?
மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டம் அடித்தது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் என கூறப்பட்டது. குறிப்பிட்ட, ஏர் இந்தியா விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
Reports of some technical issue with Tiruchi-Sharjah Air India Express flight #AXB613 Preparations on for an emergency landing at #Tiruchi from where it took off this evening #Trichy #TamilNadu @AirIndiaX Image courtesy @flightradar24 pic.twitter.com/isfLHIucN9
— Vijay Kumar S (@vijaythehindu) October 11, 2024
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "பெரிய விபத்து ஏதும் நிகழாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டன" என்றார்.
#Trichy #Airport is back to normalcy and other flights are taking off and landing as usual🙏🏾
— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 11, 2024
Kudos to the Pilot, AirCrew and ATC for doing a great job. Fabulous job by Collector Trichy Pradeep IAS in ensuring that the emergency responders responded in record time 🙏🏾
Honourable… https://t.co/sSqRLgvwLD pic.twitter.com/k7aKqeZMSz
இதையும் படிக்க: ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி