மேலும் அறிய
Advertisement
Tamil news | ஆணழகன் பட்டம் வென்ற இன்ஸ்பெக்டர்....முள்படுக்கையில் சாமியார்... இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு...! - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசை வழி பாட்டை நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
1. தமிழ்நாடு முழுதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் துவங்கி வைக்கிறார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு எதிரான தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில், ராமநாதபுரம் தேவிபட்டினம், சித்தார்கோட்டை, ஆர். காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.
2. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜையில் பெண் சாமியார் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார். இக்கோயில் மண்டல பூஜை கார்த்திகை 1ஆம் தேதி தொடங்கியது. கோயில் நிர்வாகியும், சாமியாருமான நாகராணி காப்புக் கட்டி விரதம் இருந்தார். இதையொட்டி தினமும் பூங்காவனம் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
3. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தெ.புதுக்கோட்டை சாலையில் காவல் நிலையம் எதிரே வீரஅழகர் கோயில் உள்ளது. இக்கோயில் வீர ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி முன்புற வாயில் கதவு அருகே உள்ள இடத்தில் போலீஸார் பறிமுதல் செய்த, விபத்துக்குள்ளான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அகற்றப்பட்டன.
4. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாலாறு அருகே வசிப்பவர் ரமேஷ் (51). இவர் வீட்டின் பின்புறம் வளர்த்து வந்த வாத்துகளை 10 அடி நீள மலைப்பாம்பு விழுங்கியது. தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் மற்றும் வீரர்கள் மலைப்பாம்பை பிடித்தனர்.
5.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை குற்றாலம் காவல் ஆய்வாளர் வென்றார்.
6. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்த அடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி, சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டது.
7. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை உயர்திரு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிடிகின்றனர்.
8.திண்டுக்கல் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகேஷ் அடையாளம் தெரியாத நபர்களால், நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுக் கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9. 'மதுரையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ரயில் பெட்டி தொழிற்சாலையை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும், ' என, ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
10. விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசை வழி பாட்டை நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion