மேலும் அறிய

Top 10 News: திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய், விசிகவிற்கு ஓப்பனாக எச்சரிக்கை, - டாப் 10 செய்திகள்

TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

திமுக அரசை சாடிய விஜய்

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - தவெக தலைவர் விஜய்

விசிகவிற்கு எச்சரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஊடுருவியுள்ள ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியை இரண்டாக உடைத்து விடுவாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அக்கட்சி கவனமாக இருக்க வேண்டும் - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

தமிழ்நாட்டில் இன்று, “மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்?

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல். ஆனால், இந்த முறையும் முதலமைச்சர் பதவியை தமக்கே வழங்க வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் ஏக்நாக் ஷிண்டே ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறத்தில் தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சரானால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என அஜித் பவார் தரப்பு கூறியதால் சிக்கல்

இன்று முதல் குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடுகிறது! காலை 10 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிக்கும் பிரதமர்நரேந்திர மோடி, அவையை சுமூகமாக நடத்த எதிர்கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி முறைகேடு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கூகுள் மேப்ஸ்-ஐ நம்பியதால் நடந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை பின்பற்றி வெள்ளத்தில் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த மேம்பாலத்தில் சென்ற கார், கீழே விழுந்து நொறுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.  2022ம் ஆண்டு வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட பாலத்தை சீரமைக்காமல் அரசு அலட்சியம். பாலம் இடிந்த நிகழ்வு, கூகுள் மேப்பில் அப்டேட் ஆகவில்லை காவல்துறை தரப்பு விளக்கம்.

வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில், இந்திய அண் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. 534 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலிய அணி, 101 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 6 பேர் பலி

மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குள், திடீரென நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

ஐபிஎல் ஏலம் - இன்று இரண்டாவது நாள்

ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்களின் ஏலம் இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது. முதல் நாளில் மட்டும் 10 அணிகளும் சேர்ந்து 467.95 கோடி ரூபாயை செலவிட்டு, 72 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் 24 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இன்று 150-க்கும் அதிகமான வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. டிசம்பர் 13ம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்றைய போட்டியில் இந்திய வீரர் குகேஷுடன் நடப்பு சாம்பியனான டிங் லிரேன் மோதுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget