சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை!
தமிழக அரசியலை நானும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் சரியாக சொல்ல முடியும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை கஸ்தூரி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசியலை நானும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் சரியாக சொல்ல முடியும்.
ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. ஒரு கட்சி கூட்டணிக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அனைத்துக்கட்சிகளும் ஒரு குடைக்கு கீழே வந்தால், மக்களைப் பொறுத்தவரைக்கும் எல்லா பிரச்சினைக்கும் ஏதோ ஒரு வகையில் ஆளுங்கட்சி காரணம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். வெள்ளம் வந்ததை பார்த்தால் இவர்களின் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போட்ட பைப் வேலை செய்யவில்லை. ஆனால் அடுத்த நாளே தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது. அடடா... அடுத்த நாளே தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டதே... அவர்களின் திட்டம் தான் காரணமா என்று பார்த்தால்... அப்படி இல்லை. ரோடுக்கு ரோடு ஒவ்வொரு இடத்துலையும் மோட்டாரை வைத்து பம்ப் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு 4 ஆயிரம் கோடிக்கு பம்பு மிஷினையே வாங்கி போட்ருக்கலாம்.
இது மக்கள் எல்லோருக்குமே தெரிகிறது. எங்கள் ஏரியாவில் நான் மட்டும் இல்லை. ஆயிரம் ஜனங்க இருகாங்க. எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோரும் வெறுப்பில் இருக்காங்க. அதை மீறி திமுக ஜெயிக்கிறது. ஏனென்றால் மற்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் தான். விஜய்யை வேண்டுமென்றே உசுப்பேத்தி விடுறாங்க. எடப்பாடியை உசுப்பேத்தி விடுறாங்க. அண்ணமலையை உசுப்பேத்தி விடுறாங்க. சீமான் ஏற்கெனவே சொல்லிட்டாரு. எங்கேயும் போகமாட்டேன். தனியாதான் நிற்பேன் என்று. நான் ஜெயிலுக்கு போகும்போது முதல் குரல் கொடுத்தது சீமான் ஐயாதான். அவருக்கு நான் வெளியே வந்ததும் நன்றி சொன்னேன். அந்த நன்றியோட வெளிப்பாடா சொல்கிறேன். அவர் என்னை திட்டினாலும் பரவாயில்லை. எல்லோரும் சேர்ந்து திமுகவை வெளியேற்றியபிறகு உங்கள் கொள்கையை பாருங்க என்றுதான் சொல்வேன். திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியில் வருவாரா எனத் தெரியவில்லை. விசிகவில் ஒன்னு திருமா இருக்கணும். இல்லைன்னா ஆதவ் அர்ஜுனா இருக்கணும். இரண்டு பேரும் ஒன்னா இருக்க மாட்டாங்க” எனத் தெரிவித்தார்.