குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது சளி பிடிக்குமா?நிபுணர்கள் பதில்

Published by: ஜான்சி ராணி

மழை, குளிர்காலம்

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும்

புரோபயாடிக் அதிகம் உள்ளது

தயிர் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஒரு சரியான உணவாகும், ஏனெனில் அதில் புரோபயாடிக் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

இது எந்த கால பருவத்தையும் பொருட்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக இருக்க வேண்டாம்

அறை வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும், குளிரவைத்து பயன்படுத்தினால் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது.

தயிர் இரவில் சாப்பிடக்கூடாது

இதுவும் ஒரு கட்டுக்கதைதான். தயிர் இரவு உணவிற்கு ஒரு நல்ல பக்க உணவாக இருக்கும். உண்மையில் தயிர் வயிற்றை மிகவும் நிதானமாக வைக்கும்.

ரிலாக்ஸ்

மனதையும் அமைதிப்படுத்தும். இது மூளையில் டிரிப்டோபான் என்ற தனித்துவமான அமினோ அமிலத்தை வெளியிட உதவுகிறது.

குழந்தைகள் குளிர்காலத்தில் தயிரைத் தவிர்க்க வேண்டும்

குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து உடனே சாப்பிட கூடாது. மற்றபடி சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க திட்டம் இருக்கா..?தயிரை தவிர்க்கவும்

இதுவும் உண்மையில்லை, ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை உட்கொள்வது எடை குறைப்பில் மிகவும் முக்கியமானது.

குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காது.

கொழுப்பைத் தவிர,தயிர் கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.