என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
உயிருக்கு இறப்பு இல்லை. அவர் எனக்குள் சூட்சமமாக இருந்து என்னை பாதுகாத்து வழிநடத்துறாரு. இந்த சாக்கடை, குப்பை சமுதாயத்திற்காக லைவ்வா பரிணாமம் எடுத்திருக்கிறார். இது ரோகித் இல்லை. என் கணவர் அரசுதான். இவர் அரசுவின் பரிணாமம்.
என் கணவர் அரசுதான் ரோகித்தா வந்திருக்கிறார் என அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது புதிய கணவர் ரோகித்துடன் சேர்ந்து பேட்டி அளித்தார். அதில் “மக்களுக்கு அருள் வாக்கு கூறி வந்த நான் என் கணவரே திரும்ப வந்தபிறகு எப்படி கல்யாணம் செய்யாமல் இருப்பேன். அரசுவின் உடலுக்குதான் இறப்பு.
உயிருக்கு இறப்பு இல்லை. அவர் எனக்குள் சூட்சமமாக இருந்து என்னை பாதுகாத்து வழிநடத்துறாரு. இந்த சாக்கடை, குப்பை சமுதாயத்திற்காக லைவ்வா பரிணாமம் எடுத்திருக்கிறார். இது ரோகித் இல்லை. என் கணவர் அரசுதான். இவர் அரசுவின் பரிணாமம்.
ரோகித் என்னோட உதவியாளராக இருந்தார். இவரின் வாழ்நாள் நோக்கமே அரசுக்கு சேவை செய்வதுதான். நானும் அவரும் சேர்ந்து அருளாசி வழங்கினால்தான் மக்களுக்கு முழுமையாக சேரும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அன்னபூரணி, “அரசுவை தவிர யாரும் என் அருகில் அமர முடியாது. வாழ்க்கை நடத்தவும் முடியாது. நான் தான் ரோகித்திடம் என்ன திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அரசுவோட வாழ்ந்த வாழ்க்கை திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகம் என்பது வியாபாரம். ஆனால் நாங்கள் சேவை செய்கிறோம். என்னை தேடி வரும் மக்களிடம் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை. என்னை அம்மா என்று அழைத்தாலே போதும். பிரச்சினையை நீங்கள் சொல்லாமலே தீர்ந்து விடும்.
சக்தியை நிரூபி என சொல்லும் ஆணவத்திற்கு நான் இறங்க மாட்டேன். செங்கல்பட்டில் பல பிரச்சினைகள், மிரட்டல்கள். அதனால்தான் திருவண்ணாமலை வந்தோம். நாங்கள் திருமணம் முடிந்து அருளாசி வழங்கதான் சென்றோம். ஹனிமூன் ட்ரிப் இல்லை. என் திருமணத்தையும் அதற்கான செலவையும் இங்கு வேலை செய்ய வருவோர் தான் பார்த்துக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரோகித், “நான் அவர்களுக்கு உதவியாளர் இல்லை. சீடன், பக்தன். சில ஆண்டுகளாக எனக்குள் பல பரிணாமங்கள் ஏற்பட்டதால்தான் இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.
ஐ.டி. வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்க என்ன அரசுன்னு சொன்னாலும் சரி. அப்பாற்பட்ட சக்தின்னு சொன்னாலும் சரி. என்னை அரசுவோட சக்தி ஆட்கொள்ளுது” எனத் தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வரும் செய்திகள் பல்வேறு தளங்களில் சேகரிப்பட்டதே தவிர இதற்கு ஏபிபி நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.