National Milk Day: தேசிய பால் தினம்: யார் இந்த வெண்மை புரட்சி தந்தை வர்கீஸ் குரியன்..?
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வெண்மை புரட்சி செய்தவர் வர்கீஸ் குரியன்.
1950 இன் அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. அத்தியாவசிய பொருட்களில் பால் சார்ந்த பொருட்களுக்கு அதிக கெடுபிடியாக இருந்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பால் கிடைக்காமல் மிகவும் தவித்து வந்தனர்.
வெண்மை புரட்சி:
இந்தநிலையில், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த வெண்மை புரட்சி செய்தவர் வர்கீஸ் குரியன். இதையடுத்து அவரது பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் தேசிய பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பால்பண்ணை தொழிலை நாட்டின் மிகப்பெரிய தன்னிறைவு நிலையை நோக்கி உயர்த்திய ‘Operation Flood' ல் முக்கிய பங்காற்றியவர்.
யார் இந்த வர்கீஸ் குரியன்..?
1921 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தவர் வர்கீஸ் குரியன். 1940 ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறை இளங்கலை முடித்தபின், சென்னை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் இந்தியா திரும்பிய குரியன், டாட்டா நிறுவனத்தில் சிறிதுகாலம் வேலை பார்த்து வந்துள்ளார். குஜராத் மாநிலம், ஆனந்தில் இருந்த பால் பண்ணையில் அரசுப் பணியில் சேர்ந்த அவர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து வெளியேறும் வேலை விடும் திட்டத்தை கைவிட்டார். அங்கே இருந்து அவர்களின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க கனவு கண்டார் .
அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது.
பால் உற்பத்தி:
இதன் மூலம், பால் உற்பத்தில் இந்தியாவை தன்னிறைவு தேசமாக உருவாக்கி காட்டினார். இதனால்தான் வர்கீஸ் குரியன் இந்தியாவின் வெண்மை புரட்சி நாயகன் என அழைக்கப்பட்டார். அதேபோல், இந்திய பால் சங்கம் எடுத்த முயற்சியின் அடிப்படையில், கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பால் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 21-22 பொருளாதார அறிக்கைபடி, பால் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட பால்வளத்துறையின் தந்தை Dr.வர்கீஸ் குரியன் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
தேசிய பால்தினம்:
அதில், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் ஆண்டுக்கு 209மில்லியன் டன் உற்பத்தி செய்து உலகளவில் இந்தியா முதலிடம் பெற வெண்மை புரட்சிக்கு வித்திட்ட "#பால்வளத்துறையின்_தந்தை" Dr. #வர்கீஸ்_குரியன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பால் உற்பத்தி விநியோகம் சார்ந்த தொழிலில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான பால்முகவர்கள் பால்உற்பத்தியாளர்கள் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் #தேசிய_பால்_தினம் நல் வாழ்த்துகள் 2/2 #HBD_Dr_வர்கீஸ்குரியன் #NationalMilkDay #TNMilkAssociation @ikamalhaasan pic.twitter.com/NnbhvSz8ZD
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) November 26, 2022
வெயிலோ, புயலோ, கடும் பனியோ, கனமழையால் ஏற்படும் பெருவெள்ளமோ, நோய் பெருந்தொற்று காலமோ அது எதுவாகினும் ஆண்டில் 365நாட்களும் கண் விழித்து பால் உற்பத்தி, விநியோகம் சார்ந்த தொழிலில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் #தேசியபால்தினம் நல் வாழ்த்துகள். தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க விதை போட்ட "பால்வளத்துறையின் தந்தை" Dr. வர்கீஸ் குரியன் அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.