Breaking LIVE: விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
Breaking News LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
Breaking News LIVE Updates:
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
விருதுநகரில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுக்க குழு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் சரவெடி பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING News LIVE: மேகதாது அணை - தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகா தீர்மானம்
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு நேற்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று - மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் அகிலேஷ் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தார்
நாகை: 47 நெல் மூட்டைகள் திருட்டு
நாகை அருகே பட்டமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 47 நெல் மூட்டைகள் திருட்டு: பட்டியல் எழுத்தர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை