மேலும் அறிய

12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதற்கு தொழிலாளர் நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

12 மணி நேர சட்ட மசோதாவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென பலரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் 12 மணி வேலை நேர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த முடிவானது சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 மணி நேர வேலை சட்டம் 

கடந்த 2020 ஆம் ஆண்டு 12 மணி நேர வேலை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததை தொடர்ந்து மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்ட மசோதாவின் படி, 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம்.  12 மணி நேரம் வேலை செய்யலாமா வேண்டாமா என்பதை தொழிலாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். தொழிலாளர்களின் ஒப்புதலுடன் தான் இது நடைமுறைப்படுத்தப்படும் . 

அமைச்சர்  சொல்வது என்ன? 

12 மணி நேர வேலை சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக மின்னணுவியல் துறை நிறுவனங்கள், தோல் அல்லாத காலணியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Udumalpet Power Cut:  உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
 உடுமலைப்பேட்டையில் நாளை (09-10-2026) எந்தெந்த இடங்களில் மின் தடை? - இதோ முழு லிஸ்ட்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget