TN School Leave: கனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - முழு மாவட்டங்களின் லிஸ்ட்
TN School Leave October 22: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN School Leave October 22: கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமைழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வரும் 26ம் தேதி வரையிலும் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக , மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அதேநேரம் கனமழை காரணமாக சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் மற்றும் கரூரிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஏராளமான மக்கள், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்கள் சிரமம் இன்றி மீண்டும் நகரங்களுக்கு வர, தீபாவளிக்கு அடுத்த நாளான நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, இன்றும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





















