TN Weather Report: 27, 28 தேதிகளில் வெளுக்கப் போகும் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
தமிழ்நாட்டில் நாளை(27.10.25) மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் ஒரு மாவட்டத்தில் மின கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, மாலை அல்லது இரவு நேரத்தில், மச்சிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டது.
நாளை(27.10.25) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இந்நிலையில், நாளை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மேலும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகக் கூறி மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மிக கனமழை எங்கு.?
இதேபோல், நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
மேலும், நாளை சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





















