TN Weather Forecast:வெயிலுக்கு டாட்டா... 6 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த கூல் அப்டேட் !
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
![TN Weather Forecast:வெயிலுக்கு டாட்டா... 6 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த கூல் அப்டேட் ! TN Weather Forecast March 24 to March 28 Chances of Rain 6 districts including coimbatore, tirupur, virudhunagar, Madurai- IMD TN Weather Forecast:வெயிலுக்கு டாட்டா... 6 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த கூல் அப்டேட் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/12673d81b89a8fd0a74623983e653216_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, 24, 25 ம் தேதி ஆகிய தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், 26.03.2022 ஆகிய தினத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, 28.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 24, 2022
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொடைக்கானல் (திண்டுக்கல்) 8, பிளவக்கல் (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 6, குன்னூர் (நீலகிரி), ஆண்டிபட்டி (தேனி) தலா 4, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), சின்னக்கள்ளர் (கோவை), ஆழியாறு (கோவை), சிவகிரி (தென்காசி), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 3, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), வறளியாறு (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சங்கரிதுர்க் (சேலம்), குலூர் (கோவை), ராசிபுரம் (நாமக்கல்), உதகமண்டலம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2 பல்லடம் (திருப்பூர்), ஏற்காடு (சேலம்), அமராவதி அணை (திருப்பூர்), சேலம் (சேலம்).
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)