TN Urban Election Results: தொடக்கமே தகராறு.. வாக்குவாதம் தள்ளுமுள்ளுடன் தொடங்கிய 'போடி' வாக்கு எண்ணிக்கை!
TN Urban Local Body Election Results 2022: தேனி போடி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தகராறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் தேனி போடி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் வாக்குவாதம் செய்து தகராறு செய்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும் https://bit.ly/36wBzGs





















