மேலும் அறிய

TN Rain Update: அடுத்த 3 மணிநேரம்; 13 மாவட்டங்களை அட்டாக் செய்யும் மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 

16.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2023 முதல் 22.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:

16.10.2023 மற்றும் 17.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:  

16.10.2023 மற்றும் 17.10.2023: கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.10.2023: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.10.2023 மற்றும் 20.10.2023: மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
South Africa T20 WC Final: தாங்காத பாரம்..! டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் தோல்வி, தொடரும் தென் ஆப்ரிக்காவின் பேட் லக்..!
South Africa T20 WC Final: தாங்காத பாரம்..! டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் தோல்வி, தொடரும் தென் ஆப்ரிக்காவின் பேட் லக்..!
IND Vs NZ: பெங்களூரு டெஸ்டில் படுதோல்வி - இந்திய அணிக்குள் வந்த தமிழன் - தொடரை கைப்பற்றுமா ரோகித் படை?
IND Vs NZ: பெங்களூரு டெஸ்டில் படுதோல்வி - இந்திய அணிக்குள் வந்த தமிழன் - தொடரை கைப்பற்றுமா ரோகித் படை?
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget