TN Rain Update: அச்சுறுத்தும் கனமழை... செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை என அறிவிப்பு..
நாளை தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யலாம். ஆனால் மொத்தமாக சென்னைக்கு மேல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். எனவே திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர் - டெல்டா
டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்து, கடலூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இன்னும் சில நேரம் மழை தொடரலாம். தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் குமரியின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாளை தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தை பொறுத்தவரை மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்