TN Rain Alert: ப்ளான் பண்ணிக்கோங்க.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழையா? வானிலை நிலவரம் இதுதான்..
இன்றைய நாளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain Alert: ப்ளான் பண்ணிக்கோங்க.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழையா? வானிலை நிலவரம் இதுதான்.. TN Rain Alert moderate rains to be continued today TN Rain Alert: ப்ளான் பண்ணிக்கோங்க.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழையா? வானிலை நிலவரம் இதுதான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/16/b84fd579126c6ca00eed90ba1ff686f21671154062583572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய நாளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Low Pressure Area now lies over Southeast Bay of Bengal & adjoining East Equatorial Indian Ocean. It is likely to move gradually westwards and become Well Marked Low Pressure Area over the same region during next 12 hours. pic.twitter.com/tfyqa0BM6r
— India Meteorological Department (@Indiametdept) December 15, 2022
இதனால் டிசம்பர் 16 ஆம் தேதியான இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சியானது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் (16.12.2022) : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும்.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: இன்று (16.12.2022) காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து 17.12.2022 காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் : இன்று (16.12.2022) மதியம் வரை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து 17.12.2022 காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் : இன்று (16.12.2022) காலை முதல் நாளை (17.12.2022) காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)