TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report Nov.7: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN weather Report Nov.7: சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் திரிகு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை:
08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/gbLXtpq2Mv
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 6, 2025
11-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 13-14' செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 2425 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
வடகிழக்கு பருவமழை:
கடந்த மாதமே வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் மோன்தா எனும் புயலும் உருவானது. ஆனால் அது மெல்ல மெல்ல நகர்ந்து ஆந்திராவை ஒட்டி கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாகவே பருவமழையின் தாக்கம் பெரிதாக இல்லை. அதேநேரம், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பருவமழை மீண்டும் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.





















