மேலும் அறிய
Advertisement
CM Stalin: ” ஒருதாய் மக்கள் நாம்” அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இதைச் செய்யுங்கள் - முதல்வர் ஸ்டாலின்
TN CM Stalin: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் அமெரிககாவில் இருக்கிறேனா அல்லது சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிறே அளவுக்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வையே எனக்கு நீங்கள் இப்போது ஏற்படுத்திவிட்டீர்கள்.
எங்கும் இந்தியர்கள்:
உலகின் மூன்றாவது பெரிய நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். 1971-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் வருகை தந்தார். அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இப்போது வந்திருக்கிறேன். உலகின் மதிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களான உங்களை பார்க்கும்போது எனக்குப் பெருமையாகவும். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இத்தனை இந்திய முகங்களை இங்கே பார்க்கும் போது இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்தில் இருக்கிற மாதிரிதான் எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கிறேன் என்று தோன்றவில்லை. உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் - அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது. இந்தியர்கள் வாழுகிற நாடாகத்தான் உலகின் எல்லா நாடுகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை ஈர்க்கிற நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது.
அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். pic.twitter.com/Y1WMZupYtY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 1, 2024
நியூயார்க், நியூஜெர்சி, வாசிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் எஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லாண்டா இப்படி அமெரிக்காலின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவரியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள். சில பேரை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இப்படி விரிந்த அமெரிக்கா முழுமைக்கும் தமிழர்கள் பரந்து இருக்கிறார்கள். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இந்திய இன மக்கள் இருக்கின்றீர்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கின்றீர்கள்.
”சொந்தங்களை பார்க்க வேண்டும்”
தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்கு தான் நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்.
நம்முடைய இந்தியாவும், நீங்கள் இருக்கக்கூடிய அமெரிக்காவும் உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நாடுகள். இரண்டுமே ஜனநாயக நாடுகள்,
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டு இருந்து வருகிறது.
உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியினர்:
இந்தியாவில் வர்த்தகம் அறிவியல், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. கேல்லப் என்ற நிறுவனத்தினுடைய பொது கருத்து கணிப்பின்படி அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தை இந்தியா பெற்றிருக்கிறது, அதேபோல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் பட்டியலிஸ் இந்திய மக்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க' குடியரிமை பெற்றவர்களில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் 12.1 விழுக்காடு, இந்தியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவை ஈர்க்கின்ற நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்கின்ற மக்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றாலும் உயர் கல்வியிலும் வர்த்தகத்திலும் சிறப்பான உயர் பதவிகளிலும் இந்திய வம்சாவளியினர் மிக அதிக இடங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.
”மகிழ்ச்சி தெரிகிறது”:
அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கும் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள்
ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா அமெரிக்கா உதவு மிக மிக முக்கியமாக இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போதே எனக்கு தெளிவாக தெரிகிறது என முதலமைச்சர் ஸ்டலின் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion