மேலும் அறிய

1000 Rs For Ladies:: அப்படி போடு.. வெளியானது குடும்பத் தலைவிகளுக்கான ரூ. 1000 அறிவிப்பு.. எப்போதிலிருந்து தெரியுமா?

1000 Rs For Ladies in Tamil Nadu: இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கல் தொடங்கிய சில நிமிடங்களிலே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முக்கியமாக தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 20 புதிய நாட்டுபுற கலை பயிற்சி மையம் அமைக்கப்படும், இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 223 கோடி மதிப்பில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு, ராணுவ வீரர்கள் மரணத்திற்கான நிதி 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு, சென்னை சங்கமம் கலை விழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படும், நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் மேம்பாட்டிற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு, தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கருவிகள் வாங்க நிதி வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:

இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாக மக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை தான். ஏற்கனவே இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.  

திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வராமல் இருந்தது. இதனை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்த பட்ஜெட் தாக்கலில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார். “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார். 

இந்நிலையில் இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரும் செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என அறிவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய்க்கான அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இன்று செய்யப்படும் பட்ஜெட் தாக்கலில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தப்படும், அதில் மேற்கொள்ளப்படும் அலுவவல்கள் என்ன என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாளை வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget