TN Assembly Session: 9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
வருகின்ற ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 24ம் தேதிக்கு பதிலாக ஜுன் 20ம் தேதியே தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்தநிலையில், வருகின்ற ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன் முழு விவரம் இதோ!
20.6.2024 (வியாழக்கிழமை)
- இரங்கற் குறிப்புகள்
சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.
- இரங்கல் தீர்மானம்
நா.புகழேந்தி, சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும்
21.6.2024 (வெள்ளிக்கிழமை)
காலை:
- 40 -நீர்வளத் துறை
- 55-இயற்கை வளங்கள் துறை
- 32- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
மாலை:
- 26-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
- 37-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
(சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை)
- 52 - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
- 45 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
22.6.2024 (சனிக்கிழமை)
காலை:
- 34 நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
- 42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மாலை:
- 5- வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
- 6- கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
- 7 - மீன்வளம் மற்றும் மீனவர் நலன் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
- 8- பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
23.6.2024 (ஞாயிற்றுக்கிழமை) :
அரசு விடுமுறை
24.6.2024 (திங்கட்கிழமை)
காலை:
- 20 உயர் கல்வித் துறை
- 41- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
- 51-இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு
- 43 - பள்ளிக் கல்வித் துறை
மாலை:
- 3 -நீதி திருவாகம்
- 24 - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
- 33 - சட்டத் துறை
- 28 - செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
- 30-எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
- 46 - தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
25.6.2024 (செவ்வாய்க்கிழமை)
காலை:
- 21-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
- 39 -கட்டடங்கள் (பொதுப் பணித் துறை)
- 15- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
- 54 - வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை)
மாலை:
- 9 -பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
- 18 - கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை)
- 25-இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் திருவாகம் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
- 48 - போக்குவரத்துத் துறை
- 4- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
26.6.2024 (புதன்கிழமை)
காலை:
- 36-திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
- 38 -பொதுத் துறை
- 1-மாநிலச் சட்டமன்றம்
- 2 -ஆளுநர் மற்றும் அமைச்சரவை
- 14- எரிசக்தித் துறை
- 16-நிதித் துறை
- 35 - மனித வள மேலாண்மைத் துறை
- 50-ஓய்வூதியங்களும். ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்
மாலை:
- 29-சுற்றுவா கலை மற்றும் பண்பாடு (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)
- 10-வணிக வரிகள் (வணிகவரி மற்றும் பதிவுத் துறை)
- 11-முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு (வணிக வழி மற்றும் பதிவுத் துறை)
- 47-இந்து சமய அறநிலையத் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)
27.6.2024 (வியாழக்கிழமை)
காலை
- 49-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- 53 - சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை
- 17- கைத்தறி மற்றும் துணிநூல் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை)
மாலை
- 12 -கூட்டுறவு
(கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)
- 13 - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)
28.6.2024 (வெள்ளிக்கிழமை)
காலை:
- 44 - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
- 19 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- 31- தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
- 27 - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
மாலை:
- 22-காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
- 23-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
தொடர்ச்சி
29.6.2024 (சனிக்கிழமை)
- 22-காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
- 23-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை). பதிலுரை
பேரவை காலையில் 10.00 மணிக்கும், மாலையில் 5.00 மணிக்கும் கூடும்.