TN Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த நுழைவுத் தேர்வையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 6 நாட்கள் அலுவல்கள் நடைபெற்றன.
அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் - பேரவையில் முதலமைச்சர் விளக்கம்
அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தங்க நடவடிக்கை என்றும், மத்திய அரசுடன் பேசி அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ஓபிஎஸ் பேசும்போது பிடிஆர் வெளியே சென்றது ஏன்..? - சபாநாயகர் விளக்கம்
அலுவல் நிமித்தமாகவே அமைச்சர் பிடிஆர் வெளியேறியதாக, நேற்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசிக்கொண்டிருந்தபோது வெளியேறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில், சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.