TN Anti NEET Bill: நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் - முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்
அடுத்தகட்டமாக ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
நீட் விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாகவும், மசோதாவை ஆளுநர் அனுப்பிவைத்துள்ளதாக அவரின் செயலாளர் தனக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுமுன் தெரிவித்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மசோதா ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்தகட்டமாக ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
#BREAKING | நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி https://t.co/wupaoCQKa2 | #MKStalin #RNRavi #NEET #TNGovt pic.twitter.com/naEO6CkCp1
— ABP Nadu (@abpnadu) May 4, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்