மேலும் அறிய

TN Agri Budget 2023 : ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்...வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு...!

ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு  கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு  கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  

பட்ஜெட் 2023

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாட்டின் 2023-2024ம் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை  நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்களை கேட்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

வேளாண் பட்ஜெட்

அதன்படி, சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொாகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் உயர்த்தி ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 195 கூடுதலாக வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக, வரும் நிதியாண்டில் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீட்டிலும், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டிலும், மொத்தமாக 11 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள், சூரிய சக்தி உல்ர்த்திகள், குளிர் சாதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் போன்ற உயர்மதிப்பு இனங்களுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
"நீதான்டா நல்ல ஃப்ரண்ட்” .. நண்பனை ஆட்டோவுடன் சேர்த்து கொளுத்திய 3 பேர்!
Embed widget