மேலும் அறிய

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி ! 4 வழிச்சாலையாக மாறும் திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலை

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம்.

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவக்கி உள்ளது.

திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலை

திண்டிவனம் - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ( என்எச் 66 ) போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. குறிப்பாக இச்சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆன்மிக பயணம் செய்கின்றனர். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக பெங்களூர் செல்ல வேண்டும் என்றால், திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரியை கடந்து தான் போக வேண்டும். இதுதான் பிரதான வழி.. ஆனால் இந்த சாலை இருவழிச்சாலையாகவே உள்ளது.
 
இந்தநிலையில், திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவக்கி உள்ளது. திருவண்ணாமலை, மேல்மருவத்துார், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல்; அடிக்கடி விபத்து

இச்சாலை, 183 கி.மீ., நீளம் உடையது. இந்தச் சாலையை இரு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, 2012ல் துவக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின் கடந்த ஆண்டு முடிந்தது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 624 கோடி ரூபாய் செலவிட்டது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய, நங்கிலிகொண்டான், கரியமங்கலம், நாகம்பட்டி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மற்றும் மேல்மருவத்துார் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
 
எனவே, இந்த சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன் வந்துள்ளது. இதேபோல, திண்டுக்கல் - நத்தம் இடையிலான 34 கி.மீ., சாலையும், 270 கோடி ரூபாய் செலவில் இரு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இரண்டு சாலைகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிறுவனம், அடுத்த மாதம் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின், சாலைகள் விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி, நிலங்கள் தேவைப்படும் என்ற விபரம் தெரியவரும். இந்த சாலை விரிவாக்கம் மூலம் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 
 

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget