மேலும் அறிய

“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்

அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு, பிரதமர் மோடிக்கு நன்றி: அர்ஜுன் சம்பத் வைத்த அதிரடி கோரிக்கை

தமிழ் மொழி குறித்த விவாதத்தின்போது அமைச்சர் மரிய வில்சன் பேசியது தவறான முன்னுதாரணம். அந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்கி, அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என்றும் மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆலய வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுத்து வந்தது போல, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போதைய  அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்றும், ஆனால் தீபம் ஏற்றிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு விரைவில் முருக பக்தர்களின் உரிமையை நிலைநாட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்து பேசியது தவறான முன்னுதாரணம் என்றும், இந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அமைச்சர் மரிய வில்சன் பேசியபோதே சபாநாயகர் கண்டித்து, முதலமைச்சர் உரிய அறிவுரை வழங்கி இருக்க வேண்டும் எனவும், பிறப்பிலேயே கிறிஸ்தவன் என கூறும் அமைச்சர் மரிய வில்சன் இயேசுநாதர் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறாரா என்றும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுகிறாரா எனவும், சகோதரனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் எதற்காக உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு சென்றார் என கேள்வி எழுப்பினார். தனது கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிட வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.

மோடிக்கு நன்றி தெரிவியுங்கள்

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவு அளித்திட வேண்டும் என கேட்டு கொண்டார். கரப்பான் பூச்சி கட்சி, கம்யூனிஸ்டுகள் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று உள்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை அனைவரும் ஆதரித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
“தமிழ் மொழி குறித்து தவறான பேச்சு, உடனே மன்னிப்பு கேளுங்க” - அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆவேசம்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (12-08-2026) எங்கெல்லாம் மின்தடை! இதோ லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget