மேலும் அறிய

Salem Leopard: அச்சுறுத்தும் சிறுத்தை... தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளகரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திடிர் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர், பாலமலை, எடப்பாடி, காடையாம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில்,‌ கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை, கடந்த 3 மாதமாக மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடுகிறது. 

குறிப்பாக, கடந்த 18 நாட்களாக மேட்டூர் பாலமலையை ஒட்டியிருக்கும் கொளத்தூர், குரும்பனூர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்து, இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வேட்டையாடுகிறது. மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதியில் இதுவரை 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

Salem Leopard: அச்சுறுத்தும் சிறுத்தை... தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

இந்த பகுதிகளில், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளனர். தற்போது, கொளத்தூர் வெள்ளக்கரட்டூர், கருங்கரடு பகுதியில் 4 கூண்டுகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களை காட்டிற்குள் வைத்து, கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு வனக்குழுவினர் வந்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அந்த சிறுத்தை, கூண்டில் சிக்காமல் உள்ளது.

இந்நிலையில், மேட்டூர் பகுதியில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை உள்பட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் 10 சிறுத்தைகள் சுற்றி வருவதாகவும், இவை வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த 10 சிறுத்தைகளும், கடந்த ஓராண்டிற்கு முன்பு, மேட்டூர் அடுத்துள்ள பாலமலையில் தமிழக-கர்நாடக வன எல்லைப்பகுதியில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் விடப்பட்டவை என்றும், மேட்டூர் பகுதி மலைக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேட்டூர் பாலமலை பகுதியில், பாலாறு வழியாக கர்நாடக வனத்திற்குள் வேட்டைக்காரர்கள் ஊடுருவி, சந்தன மரங்களை வெட்டுவது, யானையை வேட்டையாடி தந்தம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க கர்நாடக வனத்துறையினர், மாநில எல்லையில் 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அந்த குட்டிகள் பெரிதாகி, தற்போது தமிழக வனத்தில் உலா வருவதோடு, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் முன்பு, பாலமலை மற்றும் சேர்வராயன் மலைத்தொடரில் சிறுத்தைகள் இல்லை. இங்கு யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட விலங்குகள் தான் அதிகளவு உள்ளன. தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், ஒருவேளை மக்கள் கூறும் குற்றச்சாட்டுப்படி, கர்நாடக வனத்துறையினர், 10 சிறுத்தை குட்டி களை கொண்டு வந்து தமிழக வனப்பகுதியில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Salem Leopard: அச்சுறுத்தும் சிறுத்தை... தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

கர்நாடகா வனத்துறை மீதான இக்குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேட்டூர் பகுதியில் தற்போது பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான அதிகாரிகள், இப்புகார் பற்றி தனியாக விசாரிக்கின்றனர். ஆனால், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. சிறுத்தையை பொறுத்தவரை அது ஒருநாளைக்கு 50 கி.மீ., தூரம் வரை பயணிக்கும். அதனால், அதுவாகவே பாலமலையின் மறுபக்கத்தில் கர்நாடகா பகுதியில் இருந்து வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், மக்கள் தெரிவித்துள்ள புகார் குறித்து, தீவிர கள விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளகரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திடிர் ஆய்வு செய்தார். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்தும், சிறுத்தையை பிடிக்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
Embed widget