TN CM MK Stalin: ரூ.463 கோடி; 71 கட்டடங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
மயிலாடுதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத் திறப்பு விழா
— TN DIPR (@TNDIPRNEWS) March 4, 2024
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல் (ம) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.#CMMKSTALIN | #TNDIPR@mkstalin pic.twitter.com/NrEhtgHfnM
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பகுதியில், 13 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. புதிய கட்டிடம் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 700 படுக்கைகளுடன் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, மயிலாடுதுறையில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி புதிய திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் சீர்காழி வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிகாரிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் வருகையையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.