மேலும் அறிய

Greater Chennai Police: நாம் தமிழர் கட்சி ட்விட்டர் கணக்கை முடக்க காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதா? போலீசார் கொடுத்த விளக்கம் என்ன?

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக சென்னை பெருநகர் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தலை சந்தித்துள்ளது. நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் எப்போதுமே தணித்தே போட்டியிட்டு வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும் கொள்ளை, கொலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுதொடர்பான தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவது வழக்கம். மேலும், கட்சி சார்ந்த அறிவிப்புகள், அறிக்கைகள் உள்ளிட்டவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.

இது போன்ற சூழலில், சீமான் உள்பட 20 க்கும் அதிகமானோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று திடீரென ஒரே நேரத்தில் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சீமானின் ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மேலும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்யராஜ்.சே, சுனந்தா, விக்கி பார்கவ் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை முடக்கத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. 

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர்  திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.  கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் துறை விளக்கம்:

Greater Chennai Police: நாம் தமிழர் கட்சி ட்விட்டர் கணக்கை முடக்க காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதா? போலீசார் கொடுத்த விளக்கம் என்ன?

திடீரென ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அதற்கும் பெருநகர சென்னை காவல் துறையினருக்கும் எந்த சம்மதமும் இல்லை என தெளிவுப்படுதியுள்ளது. இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

Chennai Train: பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் ரத்து..! எந்த வழித்தடம் தெரியுமா?

CM Stalin Support Seeman: சீமானுக்காக குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! ட்விட்டர் முடக்கத்திற்கு கடும் கண்டனம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget