Chennai Train: பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் ரத்து..! எந்த வழித்தடம் தெரியுமா?
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையான மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த 7 மாதத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Train: சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையான பறக்கும் ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த 7 மாதத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே நெரிசலை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கி.மீ தொலைவுக்கு நான்காவது ரயில் பாதை அமைக்க ரயில் வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.
கடற்கரை - சேப்பாக்கம்:
இந்நிலையில், சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையான மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த 7 மாதத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையம் - சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை ஜூலை 1ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 7 மாத காலத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
It’s official now 🚨
— Tamil Nadu Infra (@TamilNaduInfra) May 31, 2023
All trains between Chennai Beach - Chepauk are to be suspended for a period of 7 months from July 1, 2023 to Jan 31, 2024 due to the fourth line works between Chennai Beach - Chennai Egmore.
Please plan accordingly. https://t.co/blbakawQnw pic.twitter.com/tG0bijKxx7
நான்காவது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை ரயில் நிலையம் - சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை 7 மாதத்திற்கு நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு இணை நடவடிக்கையாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு வேறு வழிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடைய நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Cylinder Price: ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?