Salem Prison : சிறையில் கைதிகள் அறுவடை செய்த பத்தாயிரம் கரும்புகள்... சேலம் சிறை அங்காடியில் விற்பனைக்கு தயார்..
குறைந்த விலையில் கரும்புகளை வாங்கி சிறைவாசிகளுக்கு மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய சிறை எஸ்பி வினோத் வேண்டுகோள்.

சிறை அங்காடி:
சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறை கைதிகளால் பல்வேறு பொருட்கள் தயார் செய்யப்பட்டு சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
அந்த வகையில் சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் திறந்த வெளி சிறை செயல்பட்டுவருகிறது. சேலம் திறந்த வெளி சிறையில் நன்னடத்தை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த திறந்த வெளி சிறையில் கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு கைதிகளின் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக சேலம் திறந்த வெளி சிறையில் உள்ள தோட்டத்தில் முதல் முறையாக கைதிகள் சுமார் 10 ஆயிரம் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் இன்று அறுவடை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 7வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர்! பார்ட்டிக்கு போன இடத்தில் விபரீதம்! காரணம் என்ன?
இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், "சேலம் மத்திய சிறை, ஆத்தூர் மற்றும் தர்மபுரியில் 2 மாவட்ட சிறைகளும், 12 கிளை சிறைகளும் உள்ளன. இந்த சிறைகளில் 1,600க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சேலம் திறந்த வெளிசிறையில் பயிரிடப்பட்டுள்ள 10 ஆயிரம் கரும்புகள் வழங்கப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகையன்று கைதிகளுக்கு சர்க்கரை மற்றும் பொங்கல் வழங்கப்படும். கைதிகளுக்கு கரும்புகள் வழங்கியது போல் மீதமுள்ள கரும்புகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும் கரும்புகளை பொதுமக்கள் கைதிகளை ஊக்குவிக்க வைக்க வேண்டும்" என கூறினார்.






















