திருவாதிரை 2025: ஆருத்ரா தரிசனம் எப்போது?

Published by: ABP NADU

கம்பீரமாக நடராஜன் வடிவில் இருக்கும் சிவனை கொண்டாடுவதே ஆருத்ரா தரிசனம்.

இந்த திருவிழா மார்கழி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டின் நீண்ட இரவும் இதுவே.

ஆருத்ரா தரிசனத்தின் போது ’ஆனந்த தாண்டவ’ சிவபெருமானை கண்டு பக்தர்கள் மகிழ்வர்.

இந்த பிரபஞ்ச நடனம் உலகில் இருக்கும் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை குறிக்கிறது.

இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் 13 ஜனவரி 2025-ல் கொண்டாடப்படுகிறது

இந்நாளின் பௌர்ணமி திதி ஜனவரி 13 காலை 05.03 மணிக்கு தொடங்கி ஜனவரி 14 காலை 03.56 மணிக்கு முடிகிறது.

அந்நாளின் திருவாதிரை நட்சத்திரம் ஜனவரி 12 காலை 11.24 மணிக்கு தொடங்கி ஜனவரி 13 காலை 10.38 மணிக்கு முடிகிறது.

இவ்விழா தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.