அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர் தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அயலகத் தமிழர்களால் பாலைவனம் சோலவனமாகியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர் தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அயலக தமிழர்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் “ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என்று நான் எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலக தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர்.
தாய் மண்ணில் வாழக்கூடிய உணர்வை அயலகத்தில் வாழக்கூடிய தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர். அமெரிக்காவில் தமிழர்கள் என் மீது காட்டிய பாச உணர்வை இன்னும் மறக்கமுடியவில்லை.
உலக தமிழர்களுக்கு அயலக தமிழர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. இங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்கள் ஓய்வறியா உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்நாடுகளை வளர்த்தார்கள்.
அயலக தமிழர்களால் பாலவனம் சோலைவனமாகியது. நீங்கள் கடந்து வந்த பாதை, பட்ட துயரங்கள், அடைந்த உயரத்தை உங்கள் குடும்பம் எண்ணிப் பார்க்கும். நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை, உங்களையும் தமிழ்நாடு மறக்கவில்லை. இதுதான் தமிழினத்தின் பாசம். எதிர்காலத்தில் அயலகத் தமிழர்கள் மேலும் சிறப்பாக வாழ திட்டங்களை உறுதிப்படுத்துவோம்.
எந்த துரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்திவிடக்கூடாது. நிலமெங்கும் நிறைந்திருக்கக் கூடிய தமிழர்களின் இதயம் கவர்ந்த அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. இந்தியா வளமாக இருக்க அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தமிழர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா நடக்கிறது.
தமிழர்களின் இதயம் கவர்ந்த அரசு திராவிட மாடல் அரசு. அயலக மண்ணில் குடியேறினாலும் தமிழை வளர்க்க பாடுபடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி. வேர்களை தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல். பல நூற்றாண்டு முன்பு புலம் பெயர்ந்த தமிழர்களின் சொந்தங்களை கண்டுபிடித்து அழைத்து வந்து சொந்தஙக்ளை கண்டுபிடித்து அழைத்து வந்து சொந்த ஊரை கண்டுபிடிப்பதுதான் வேர்களை தேடி திட்டம். உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும், மனதை உலுக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் தமிழர்களுக்கு உதவிக்கரம்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

