மேலும் அறிய

TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று இரவு  கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வானிலை:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-12-2024) காலை 0830 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Also Read; School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை :

07-12-2024 முதல் 09-12-2024 வரை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-12-2024:

கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

11-12-2024:

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

12-12-2024:

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13-12-2024:

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
Embed widget