TN Rain: சில்லென்ற வானிலை! அடுத்த 3 நாட்கள் தமிழ்நாட்டில் இப்படித்தான் இருக்கப்போகுது!
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி உள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று வானிலை எப்படி?
சுதந்திர தினமான இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுநாள் எப்படி?
நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை:
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சில மாதங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.