மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: விமானப்படை சாகசம்! மெரினாவில் குவியும் மக்கள் - 10 மணி வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னையில் இந்திய விமானப்படை சாகசத்தை முன்னிட்டு முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை முதலே திரளாக குவிந்த பொதுமக்கள் – பலத்த போலீஸ் பாதுகாப்பு
- சென்னை விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் தேஜஸ், ரபேல் உள்ளிட்ட 72 விமானங்கள் பங்கேற்பு
- விமானப் படை சாகசத்தை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
- ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரிப்பு – மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை
- சேலம் சூலமங்கலத்தில் கொட்டிய கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – வீட்டிற்குள் தேங்கிய நீர் வெளியேறாததால் மக்கள் கடும் அவதி
- புதுக்கோட்டையில் தொடர்ந்து மழை பெய்தால் மலர் அங்காடியில் முட்டியளவு தேங்கிய மழைநீர்
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாயை இழந்த இளைஞர் – மன உளைச்சலில் தற்கொலை
- பா.ஜ.க.வினர் வதந்திகளை பரப்பி வரலாற்றை மாற்றுகின்றனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- பா.ஜ.க.வின் திட்டங்களை உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவா வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வறட்சியால் மக்காச்சோளப் பயிர்கள்
- தசரா திருவிழா; குலசேகரப்பட்டினத்தில் களைகட்டும் கொண்டாட்டம் – பக்தர்கள் உற்சாகம்
- சென்னையில் 144வது தி.மு.க. வார்டு கவுன்சிலர் சஸ்பெண்ட்
- பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருது நிறுத்தி வைப்பு
- சென்னையில் ஆன்லைனில் போதைப் பொருள் விற்பனை – 2 பேர் கைது
- ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைவு – தக்காளி விலை கிடுகிடு உயர்வு
- தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion